மனம் ஒரு குப்பை தொட்டி அல்ல!

ஒரு பழமொழி சொல்வார்கள்...

"சொர்கத்தை அடைய எல்லாரும் விரும்புகிறார்கள் அனல் இறக்கத்தான் யாரும் விரும்புவதில்லை..."

உண்மைதான் நண்பர்களே..

சின்ன உண்மை சம்பவம்..நிறைய பேருக்கு இது தெரிந்து இருக்கலாம் ...
சமீபத்தில் ஒரு புகழ் பெற்ற இயக்குனர் ஒருவரிடம் பேசிக் கொண்டு இருந்தேன்.
எப்படி உங்களுக்கு முதல் வாய்ப்பு கிடைத்தது என்று கேட்டேன்.அவர் சொன்னபதில் வித்யாசமாக இருந்தது சின்ன வயதில் இருந்தே எனக்கு சினிமா என்றால்உயிர்..அதனால் சொல்லாமல் கொள்ளமால் 250 ரூபாய் பணத்தோடு
வாய்ப்பு தேடி எனது 21 வயதில் சென்னை வந்துவிட்டேன்..

சென்னையில் எனக்கு நண்பர்களோ உறவினர்களோ யாரும் இல்லை அதைபற்றி நான் கவலை படவும் இல்லை. (எனக்கு பிடிவாத குணம் எபோதுமே) அதனால் சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கியதும் எந்த பஸ் கிளம்புகிறதோஅதில் ஏறி எங்கு கடைசியாக நிற்கிறதோ அங்கு வேலை செய்வது என்றுமனதுக்குள் முடிவு செய்து விட்டேன். பஸ் நின்ற இடம் மைலாப்பூர்.

கோயில் கோபுரத்தை பார்த்து ஒரு கும்பிடு போட்டு விட்டு என் வேலை
தேடும் படலத்தை ஆரம்பித்தேன்..என் முதல் இலக்கு ஒரு உணவகம்..ஏன்என்றால் அங்குதான் உணவும் தங்க இடமும் உடனே கிடைக்கும். அது மட்டும்அல்லாமல் SHIFT வேலையாகவும் இருக்கும்.

வேலை கிடைத்த முதல் இரண்டு நாட்கள் மிகுந்த வேதனை யாக இருந்தது. ஒருநடுத்தர குடும்பத்தில் பிறந்து விட்டு இந்த ஊரில் சர்வர் வேலை செய்கிறோமேஎன்று.. அது மட்டும் அல்ல யாரேனும் ஊர் காரர்கள் வந்து விடுவார்களோ என்றுவேறு பயம்..

அப்புறம் அதுவும் அந்த இரண்டு நாட்கள்தான்.. அப்புறம் நான் மனதுக்குள் முடிவுசெய்தேன். நாம் இங்கு வந்து இருப்பது கோடம்பாக்கத்தில் பாலச்சந்தராகவோ,பாரதிராஜாகவோ ,மணிரத்னமாகவோ ஆக... அதனால் எது சரி, எது தவறு, எதுகேவலம், எது நல்லது என்று மனதில் பட்டிமன்றம் நடத்தி பார்க்க வேண்டியஅவசியம் இல்லை.

துணிந்து இருந்து வந்தாகி விட்டது, அப்புறம் என்ன... கோடம்பாகத்தை ஒருகை பர்ர்த்து விடுவோம் என்று.

உணவகத்திலும் சரி வெளியிலும் சரி எல்லாரும் சகஜமாக பழக ஆரம்பித்தேன்.யாரிடமும் சரியாக ஊரில் பேசாத நான் இப்போது கலகலப்பாகமாற்றி கொண்டேன். ஒவொரு வாடிக்கையாளரிடமும் நல்ல பேர்எடுத்தேன்..முதலாளியின் அபிமானத்தையும் சீக்கிரம் பெற்று விட்டேன்.

சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் எந்த வேலையாக இருந்தாலும் அதைஅனுபவித்து செய்ய ஆரம்பித்தேன்..ஒவ்வொரு வாடிக்கையாளரின் தட்டில் சாம்பார் ஊற்றும் போடும் நான் எனக்குள் சொல்லிகொள்வேன் "டே பையா இந்தஉணவகத்தை பொறுத்தவரை நான் சர்வர் , அனால் எனக்கு மட்டும் தான் தெரியும்நான் நாளைக்கு என்ன ஆக போகிறேன்" என்று..(என்ன பாசிடிவ் ஆன வார்த்தைகள்...)


நண்பர்களே! அந்த ஹோட்டல் சர்வர் இன்று ஒரு புகழ் மிக்க இயக்குனர்..நான்இதை கேட்கும் பொது சின்ன வயதில் என் நோட்டு புத்தகத்தில் எப்போதும் எழுதிவைப்பேன் (U NEVER KNOW WHAT U CAN BECOME!) இது FOUR SQUARE COMPANYயின் TAGLINE. அதனால் யாருக்கும் தெரியாது யார் எப்படி எப்போது என்ன ஆவார்கள் என்று..

அந்த இயக்குனரின் வாழ்வில் நாம் கற்றுகொள்வது என்ன..?

கனவை நோக்கி எந்த பயமும் இல்லாமல் யாருடைய உதவியும் எதிர்பார்க்காமல் புது ஊரில் முற்றிலும் வேறு மாதிரியானசூழ்நிலையை(ஹோடேலில் சர்வர் வேலை ) எதிர்கொண்டது...

நம்மில் பல பேருக்கு இது நடக்குமோ நடக்காதோ கிடைக்குமோ கிடைக்காதோயாருமே நமக்கு அந்த ஊரில் தெரியாதே அப்பறம் எப்படி அங்க சென்று வாய்ப்புதேடுவது என்ற பயம் எல்லாம் வந்து இருக்கும். அவர் அப்படி யோசித்துஇருந்தால் அந்த கிராமத்தில் தான் வாழ்க்கை முடிந்து இருக்கும். நம்மில் பலபேருக்கு நடக்குமோ நடக்காதோ என்ற பூவா தலையா மனது...நடக்காவிட்டால்என்ன அடுத்த முறை நடத்தி காட்டிவிட்டால் போகிறது... அதை முதலில் உதறிதள்ளினாலே வெற்றி நிச்சயம்..


1.என்ன உடனடி தேவையோ (உணவு,இருப்பிடம்) அதை பெற்றுக்கொண்டுஅதிலுருந்து அடுத்த வேலையை (சினிமா சான்ஸ்) முயற்சித்தது.

2.எந்த வேலையாய் இருந்தாலும் அதை அனுபவித்து யாரை பற்றியும் கவலைபடாமல் செய்தது..

3.முதலில் ஒனரிடமும், வாடிகையாளரிடமும்,சக ஊழியர்களிடமும் நல்ல பெயர்எடுத்தது..

4.இருக்கும் நேரத்தை வீண் ஆக்காமல் அதை பயன் படுத்தி கொண்டது.

நண்பர்களே பெரிதாய் கனவு காணுங்கள்...

அந்த கனவை அடுத்தவர்களிடம் உரக்க சொல்லுங்கள்

யார் என்ன யோசிப்பார்கள், என்ன சொல்வார்கள் என்று கவலை படாதீர்கள்

அது உங்கள் கனவு உங்கள் லட்சியம் அதை பற்றி கருத்து சொல்ல,விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை..அதற்கு தகுதியும் இல்லை.

என் எனில் கனவு பற்றி பிறரிடம் சொல்ல தயங்குவோம் எனில் நமக்கு நம் மீதேசந்தேகம் இருக்கிறது அன்று அர்த்தம். முடிவுகளை பற்றி கவலை படாதீர்கள்முயற்சியை பற்றி மட்டும் கவலை படுங்கள்...

நாம் நம் இலக்கை அடைய சரியான திசையில் சென்று கொண்டு இருகின்றோமஎன்று RE ANALYZE செய்து பாருங்கள்...

உங்களுக்கு என்று சரியான ஒன்று அல்லது இரண்டு நண்பர்களிடம் மட்டுமேஉங்கள் இலக்கை பற்றி பேசுங்கள்..அதுவும் அவரால் உங்களை GUIDE செய்யமுடிந்தால் மட்டுமே.

ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே..இந்தஉலகத்தில் உங்கள் கனவுகளையும் கஷ்டங்களையும் காது கொடுத்து கேட்க 99%பேருக்கு நேரம் இல்லை ,மனதும் இல்லை , அவரவர் கமிட்மென்ட்அப்படி..

மற்ற பேருக்கு அடுத்தவர்களை ஏளனம் செய்வதே ஒரு வாடிக்கை யாகஇருப்பார்கள். புறம் தள்ளுங்கள் எல்லாரையம்..

உங்களால் முடியும் என்று தீர்மானமாக நம்புங்கள்..உங்கள் மனதோடு பேசுங்கள்..எப்போதுமே பாசிடிவ் ஆக...

தேவைஇல்லாத எதையும் உங்கள் மனதுக்கு எடுத்து செல்லாதீர்கள்..மனம் மாபெரும் சக்தி வாய்ந்த இயந்தரம்..தயவு செய்து அதை குப்பை தொட்டியாக மாற்றிவிடாதீர்கள்!

நம்புங்கள் நம்மால் முடியும்...

யார் வேண்டுமானாலும் லட்சாதிபதியாக முடியும்...

நம்புங்கள் நம்மால் முடியும்...

நம்மில் பல பேருக்கு அம்பானி யாக விருப்பம்...அனால் எதனை பேருக்கு அவரை மாதிரி உழைக்க விருப்பம்? நண்பர்களே ஒன்று மட்டும் உண்மை..எப்போது நம் மனம் நம்மால் லட்சாதிபதியாக முடியும் என்று நம்புகிறதோ அப்போதிலிருந்தே நாம் லட்சாதிபதியாகி விட்டோம்..திரும்பவும் சொல்கின்றேன்..நம்புங்கள் நம்மால் லட்சாதிபதியாக முடியும்...எல்லா எண்களும் 0 யில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது.

அம்பானியை விடுங்கள்.. நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சியை எடுத்துகொள்ளுங்கள்..

அவர் என்ன mba goldmedalista? IIT யில் பட்டம் பெற்றவரா ? WHATRON பள்ளி மாணவரா? எதுவும் இல்லையே?அப்புறம் எப்படி அவரால் இந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது? இன்னும் கொஞ்ச நாளில் tnagar சரவணா நகர் ஆகி விடும் போல் இருக்கிறது..


துணி வாங்க,நகை வாங்க கூடி குவிகிறோமே என்றாவது ஒரு நாள் எப்படி அவரால் முடிந்தது என்று யோசித்து இருக்கின்றோமா அவரின் சாதனைகளை உணர முடித்த நமக்கு அதற்கு பின்னால் இருந்த உழைப்பை உணர முடியவில்லையே ஏன்?

வெற்றி பெற்ற ஒவ்வொரு சாதனை யாளர்களுக்கும் பின்னால் மிக பெரிய சோதனைகளும், சவால்களும் இருந்தன அவைகளை அவர்கள் அதை போராடிவென்றார்கள் அல்லது வென்று கொண்டு இருக்கிறார்கள் வெற்றி வெறும் icing cake அல்ல நண்பர்களே ...வலிகளும், வேதனைகளும்தான்..

லட்சாதிபதியாக எளிய 5 வழிகள்


பணத்தை சம்பாதியுங்கள்
எல்லாவற்றையும் செலவு செய்யாதீகள்
குறைந்தது பத்து முதல் பதினைந்து சதவீதம்சேமியுங்கள்
அந்த பணத்தை சரியான விதத்தில் முதலீடு செய்யுங்கள்
திரும்பவும் 1 முதல் 5 வரை செய்யுங்கள்