நம்புங்கள் நம்மால் முடியும்...

யார் வேண்டுமானாலும் லட்சாதிபதியாக முடியும்...

நம்புங்கள் நம்மால் முடியும்...

நம்மில் பல பேருக்கு அம்பானி யாக விருப்பம்...அனால் எதனை பேருக்கு அவரை மாதிரி உழைக்க விருப்பம்? நண்பர்களே ஒன்று மட்டும் உண்மை..எப்போது நம் மனம் நம்மால் லட்சாதிபதியாக முடியும் என்று நம்புகிறதோ அப்போதிலிருந்தே நாம் லட்சாதிபதியாகி விட்டோம்..திரும்பவும் சொல்கின்றேன்..நம்புங்கள் நம்மால் லட்சாதிபதியாக முடியும்...எல்லா எண்களும் 0 யில் இருந்து தான் ஆரம்பிக்கின்றது.

அம்பானியை விடுங்கள்.. நம்ம சரவணா ஸ்டோர் அண்ணாச்சியை எடுத்துகொள்ளுங்கள்..

அவர் என்ன mba goldmedalista? IIT யில் பட்டம் பெற்றவரா ? WHATRON பள்ளி மாணவரா? எதுவும் இல்லையே?அப்புறம் எப்படி அவரால் இந்த அளவுக்கு சாதிக்க முடிந்தது? இன்னும் கொஞ்ச நாளில் tnagar சரவணா நகர் ஆகி விடும் போல் இருக்கிறது..


துணி வாங்க,நகை வாங்க கூடி குவிகிறோமே என்றாவது ஒரு நாள் எப்படி அவரால் முடிந்தது என்று யோசித்து இருக்கின்றோமா அவரின் சாதனைகளை உணர முடித்த நமக்கு அதற்கு பின்னால் இருந்த உழைப்பை உணர முடியவில்லையே ஏன்?

வெற்றி பெற்ற ஒவ்வொரு சாதனை யாளர்களுக்கும் பின்னால் மிக பெரிய சோதனைகளும், சவால்களும் இருந்தன அவைகளை அவர்கள் அதை போராடிவென்றார்கள் அல்லது வென்று கொண்டு இருக்கிறார்கள் வெற்றி வெறும் icing cake அல்ல நண்பர்களே ...வலிகளும், வேதனைகளும்தான்..